போதை மற்றும் குடிப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி.

போதை மற்றும் குடிப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி.


பிஷப் ஹீபர் கல்லூரியின் வரலாற்றுத்துறை மாணவர்கள் போதைக்கும், குடிப்பழக்கத்திற்கும் எதிரான விழிப்புணர்வுப் பேரணி ஊர்வலத்தில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெள்ளிக்கிழமை காலை பத்து முப்பது மணிக்கு பிஷப் ஹீபர் கல்லூரியின் வளாகத்தை விட்டு புறப்பட்டு வெஸ்ட்ரிஸ் பள்ளி வழியாக மத்திய பேருந்து நிலையத்தை அடைந்து அங்குள்ள காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்தி மாணவர்கள் அனைவரும் ஒருங்கிணைத்த குரலில் மது அருந்த மாட்டோம், போதை வஸ்துக்களை பயன்படுத்த மாட்டோம் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மேலும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டி , தமிழ்நாட்டை போதை இல்லா மாநிலமாக அறிவிக்க கோரி தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுவித்தனர். மேலும் இப்பேரணிக்கு ஆயத்தப் பணியாக முதல் நாளில் 1000 க்கும் மேற்பட்ட பொது மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு அவர்களிடம் இருந்து கையொப்பமும் பெறப்பட்டு  இன்று பேரணி முடிந்த பின்பு மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்திற்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பத்தை வழங்கினர்.

மாணவர்களின் இந்த முயற்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். இவர்கள் வழங்கிய விண்ணப்பத்தில் கீதா நகர் , குமரன் நகர் ,பாரதி நகர், சண்முகா நகர், புத்தூர் நால்ரோடு அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் போதைக்கும் டாஸ்மாக் கடைக்கும் எதிர்ப்பு தெரிவித்து கையொப்பமிட்டிருந்தனர்.  

இந்த ஊர்வலத்தில் காமராஜர் பவுண்டேஷன் ஆப் இந்தியா அமைப்பின் மூத்த தலைவர்களும், பிஷப் ஹீபர் கல்லூரியில் வரலாற்றுத்துறை ஓய்வு பெற்ற துறைத் தலைவருமான  பேராசிரியர் டாக்டர் ஜான் குமார் , பொதுச்செயலாளர் காமராஜர் பவுண்டேஷன்  ஆப் இந்தியா, புனித சிலுவைக் கல்லூரியின் வரலாற்றுத்துறை ஓய்வு பெற்ற துறை தலைவர்  மேஜர். விஜி  அம்மையார்  அவர்களும், டாக்டர் சேதுராமன் கடலூர் அரசு கல்லூரியின் பேராசிரியர், இளங்கோவன் மன்ற உறுப்பினர்களும்  இந்த ஊர்வலத்தில் மாணவர்களுடன்  இணைந்து  ஊர்வலமாக வந்து காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்தி விட்டு, மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து  விண்ணப்பத்தையும் வழங்கினர்.

இந்த ஊர்வலத்தையும்  மாவட்ட ஆட்சியாளரிடம் வழங்கிய விண்ணப்பத்தையும் பிஷப் ஹீபர் கல்லூரியின் வரலாற்று துறை  துறைத் தலைவர் முனைவர் ஃபெமிலா  அலெக்சாண்டர் அவர்களும் மற்ற   பேராசிரியர்களும்  மாணவத் தலைவர்களும் முன்னெடுத்து நடத்தினர்.


எதிர்காலத்தில், தமிழ்நாடு சிறந்து விளங்குவதற்கு போதைக்கு அடிமை இல்லாத மாணவ சமுதாயத்தை உருவாக்க இது போன்ற  விழிப்புணர்வு ஊர்வலத்தை, கூட்டங்களை முன்னெடுத்து நடத்துவதாக வரலாற்று துறை மாணவர்கள் சபதம் ஏற்றுக் கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு பேரணி பொதுமக்களிடத்தில் போதை பொருட்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாணவ சமுதாயத்தை போதையில் இருந்தும் போதை வஸ்துக்களிடமிருந்து காப்பாற்றுவதற்கும் ஏதுவாக இருக்கும் என்று மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கூறினர். சுற்று வட்டாரங்களில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகள் மற்றும் கடை தெருக்களில் கடை வைத்திருக்கும் கடைக்காரர்களிடத்திலும்  மாணவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களின் எதிர்ப்பை உறுதி செய்து  கையொப்பத்தையும் பெற்றுக் கொண்டனர்.

https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5


 
#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvisionn