ஸ்ரீ லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகம்
விசேஷமாக போற்றப்படக்கூடிய காட்டழகிய சிங்கப்பெருமாள், ஆற்றழகிய சிங்கப்பெருமாள், மேட்டழகிய சிங்கப்பெருமாள் கோவில்கள் விசேஷமாக போற்றி வணங்கக்கூடிய ஸ்தலங்கள் ஆகும். அந்த வகையில் திருச்சி ஓடத்துறை காவிரி கரையில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோவில் எனப்படும் ஆற்றழகிய சிங்கப்பெருமாள் ஆலயம் பிராத்தனை ஸ்தலமாக கருதப்படுகிறது.
திருமணத்தடை நீக்கும், குடும்ப ஒற்றுமை அதிகரிக்கச் செய்யும் இத்திருக்கோவிலில் திருப்பணி கைங்கரியங்கள் யாவும் நிறைவு பெற்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
நேற்று முன்தினம் மகா சுதர்சன ஹோமம் மற்றும் வாஸ்து ஹோமத்துடன் தொடங்கி பின்னர் முதலாம் கால மற்றும் இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் நிறைவு பெற்று, இன்று மூன்றாம் காலையாக பூஜை வேள்விகளுக்கு பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் யாவும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா சம்ரோக்ஷணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG