2 குழந்தைகளை உடலில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

2 குழந்தைகளை உடலில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஆண்டி கவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் சேலத்தில் ஜேசிபி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி தங்கமணி (26). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று தங்கமணி வீட்டில் இருந்த நிலையில் குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் தங்கமணியின் மாமனார் - மாமியாரிடம் பணம் கேட்டதால் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மணமுடைந்த தங்கமணி தனது மூத்த மகளை மட்டும் வீட்டில் விட்டு விட்டு பிரித்விகா (3), லட்ஜித் (1.1/2) ஆகியருடன் மாயமானார். இதனை அடுத்து அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தங்கமணி மற்றும் குழந்தைகளை பல்வேறு இடங்களில் தேடினார்.

ஆனால் அவர்கள் எங்கும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து அவர்களது வீட்டில் இருந்து சிறிது தொலைவில் உள்ள பயன்பாட்டு இல்லாத கிணற்றில் மேல் பகுதியில் தங்கமணியின் காலனி கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அப்ப பகுதி மக்கள் மணப்பாறை போலீசார் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதன் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி தேடினர்.

நீண்ட நேரம் தேர்தலுக்குப் பிறகு தங்கமணி மற்றும் அவரது மகன் லட்ஜித் ஆகியோரின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். அதன் பிறகு பிரித்விகாவின் உடல் சுமார் ஒரு மணி நேர தேடுதலுக்கு பிறகு மீட்கப்பட்டது. தங்கமணி தனது உடலில் துண்டால் குழந்தைகளை கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவர்கள் மூன்று பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தங்கமணிக்கு திருமணம் முடிந்து 7 ஆண்டுகள் ஆவதால் ஸ்ரீரங்கம் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகின்றார்.

குடும்ப பிரச்சனையில் இரண்டு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision