திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்ற சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி ஜமால் முகமது கல்லூரி (மகளிர்கள்) மாலை நேரப் பிரிவின் சார்பில் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்ற சார்பில் விழிப்புணர்வு பயிலங்கம் நடைபெற்றது. நிகழ்வில் தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி.நீலமேகம் தலைமை வகித்தார்.
தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி.சதீஷ் குமார் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழாய்வுத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் மோகனப்பிரியா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர்தம் சிறப்புரையில் மறைநீர் குறித்தும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பெண்களின் பங்கு இன்னும் தீவிரமாக செயல்பாட்டில் வரவேண்டும் , சூழல் பாதுகாப்பில் பெண்கள் இயற்கைக்கு நெருக்கமானவர்கள், உண்ணும் உணவில் தேநீரில் கலந்துள்ள மறைநீரைக் கணக்கிட்டாலே அதன் மதிப்பை சமூகம் உணர்ந்து கொள்ளும், ஒவ்வொரு பொருளுக்கும் பின்னுள்ள மறைநீரால் பொருளாதாரம் கணக்கிடப்படுகிறது. நீரின் மதிப்பை உணராத சமூகம் பொருளியலில் பின்தங்கும். எனவே நீரையும் பாதுகாத்து நீர்வளங்களையும் பாதுகாத்திட வேண்டும் என்றார்.
நிகழ்வில் பிளாஸ்டிக் கை, தவிர்ப்போம் , துணிப்பையை எடுப்போம். என விழிப்புணர்வு மாணவிகளிடம் எடுத்துரைப்பட்டது. தண்ணீர் அமைப்பு இணைச்செயலர் ஆர்.கே.ராஜா, தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜெகனாரா, மாணவியர்கள் பங்கேற்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn