திருச்சியில் இழுபறியாகும் பேரூராட்சி துணைத்தலைவர் பதவி

திருச்சியில் இழுபறியாகும் பேரூராட்சி துணைத்தலைவர் பதவி

திருச்சி மாவட்டம் தொட்டியம் பேரூராட்சியில் துணைத் தலைவர் பதவி திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கி திமுக தலைமை கழகம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 26 ம் தேதி துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்றது. அப்போது பேரூராட்சித் தலைவர் சரண்யா அதிமுக உறுப்பினர்கள் ஐயப்பன் ராஜேந்திரன் சோபனா மற்றும் சிபிஎம் உறுப்பினர் கலைச்செல்வி மட்டுமே பங்கேற்றிருந்தனர்.

மீதமுள்ள 10 வார்டு உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை இதனால் அப்போது தேர்தல் தற்காலிகமாக தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மே 25 ம் தேதி நண்பகல் பேரூராட்சி அலுவலகத்தில் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் மாவட்ட சிறப்பு துணை ஆட்சியர் (டாஸ்மாக் பறக்கும் படை பிரிவு) காளிமுத்தன் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் கரு. சண்முகம் மற்றும் பேரூராட்சி தலைவர் சரண்யா முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலின்போது பேரூராட்சி தலைவர் சரண்யா அதிமுக சேர்ந்த வார்டு உறுப்பினர் ஐயப்பன் சி.பி.எம் கட்சி உறுப்பினர் கலைச்செல்வி ஆகிய மூவர் மட்டுமே பங்கேற்றிருந்தனர். மீதமுள்ள 12 வார்டு உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை இதனால் தேதி குறிப்பிடப்படாமல் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO