திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் புகார் - மேயர் திடீர் விசிட்

திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் புகார் - மேயர் திடீர் விசிட்

திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசர கூட்டம் நேற்று (25.05.2022) மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில் திருச்சி மாநகராட்சி வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தங்களது வார்டுகளில் உள்ள குறைகள் மற்றும் தேவைகள் குறித்து மாநகராட்சி மேயரிடம் கவுன்சிலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இன்று திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மண்டலம்  எண் 5. 8வது வார்டு மாமன்ற உறுப்பினர் பங்கஜம் மதிவாணன் மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்தார்.

அதனடிப்படையில் உறையூர் மேட்டுதெரு அங்கன்வாடி மையத்தை சீரமைப்பது தொடர்பாக நேரில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் வரையில் பாண்டமங்கலம் பகுதியில் உள்ள பழமைவாய்ந்த அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்து அதை உடனடியாக இடித்துவிட்டு புதிதாக அங்கன்வாடி மையம் கட்டடம் கட்டவும், மேட்டுத்தெரு அங்கன்வாடி மையத்தை உடனடியாக சீரமைக்க ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் மண்டலம் எண். 4. 58வார்டு  அன்பு நகர் பகுதியில் மாமன்ற உறுப்பினர் கவிதா செல்வம் மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை வைத்தவர்கள்.

அதனை ஏற்று அங்கு உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பழுதடைந்த நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து உடனடியாக அதனை சீரமைக்க பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வில் உதவி ஆணையர் செல்வ பாலாஜி மண்டல தலைவர் பதவி ஜெயலட்சுமி கண்ணன் உதவி செயற்பொறியாளர்கள் பாலசுப்ரமணியன் ராஜேஷ் கன்னா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.