வாழ்வாதாரத்திற்கு வழிகாட்ட சாமி வேடமிட்டு கலைஞர்கள் மனு

வாழ்வாதாரத்திற்கு வழிகாட்ட  சாமி வேடமிட்டு கலைஞர்கள் மனு

திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு நாட்டுப்புறக்கலைஞர்கள் நலச்சங்கத்தில் பதிவு பெற்ற கலைஞர்கள் 3000 நபர்களும், பதிவு செய்யாத கலைஞர்கள் 12,000 நபர்களும், மாற்று ஊடக கலைஞர்கள் 100 நபர்களும், தெருக்கூத்து கலைஞர்கள் 500 நபர்களும், கலைஞர்களாய் குடும்பத்தோடு திருச்சி மாவட்டத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழ்நாடு நாடக மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் திருச்சி மாவட்டம் சார்பில் சாமி வேடமிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில் கொரோனா பெருந்தொற்றால் எவ்வித கலைநிகழ்ச்சியும் இல்லாமல் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாகவும், கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிகாட்டும் விதமாக கோயில் திருவிழாவில் கலைநிகழ்ச்சி நடத்த அனுமதியும், வீதி நாடக் கலைஞர்களுக்கு திருச்சி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடத்தவும், கொரோனா காலத்து நிதியுதவி அரசு அறிவித்த ரூபாய் 2000 பதிவு செய்யாத கலைஞர்களுக்கும் கிடைத்திட ஆவண செய்யுமாறு கலைஞர்கள் சார்பாக  கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் எல்லாவற்றிக்கும் 50% அனுமதி அளித்துள்ள அரசு கருணையோடு எங்களுக்கும் கொரோனா வழிகாட்டுதலோடு மாலை நேரத்தில் ( 6 முதல் 10 மணி வரை ) நிகழ்ச்சி நடத்த ஆவண செய்யுமாறு   கலைஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu