திருச்சியில் "கற்போம் எழுதுவோம்" இயக்க தன்னார்வலர்கள் பாராட்டு விழா

Advertisement
கிராமப்புறத்தில் உள்ள கல்வி கல்லாதவர்களுக்காக கற்போம் எழுதுவோம் இயக்கத்தின் மூலம் தன்னார்வலர்கள் உருவாக்கப்பட்டு கிராம பகுதியில் உள்ள மிகவும் கல்வியறிவு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கையெழுத்து போடவும், அடிப்படை கல்வியை கற்றுத் தருவதுமே இந்த இயக்கத்தின் முக்கியமான பணியாகும்.
Advertisement
இந்நிலையில் இன்னர் வீல் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி மற்றும் திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் மணப்பாறை கல்வி வட்டம் கற்போம் எழுதவோம் இயக்கம் சார்பாக தன்னார்வலர்களுக்கு பரிசளிப்பு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
Advertisement
திருச்சி சோமரசம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் மணிகண்டம் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம், மணப்பாறை கல்வி வட்டம் ஜெகநாதன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பெரியசாமி, இன்னர் வீல் கிளப் தலைவர் உஷா குமார், இன்னர் வீல் கிளப் செயலாளர் ஜெயஸ்ரீ நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.