திருச்சியில் 8600 பேருக்கு வேலைவாய்ப்பு - ஆட்சியர் அறிவிப்பு!!

Advertisement
திருச்சி மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 28ம் தேதி அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளதாகவும், அதில் 8600 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Advertisement
தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதற்காக மாவட்டம் தோறும் அரசு வேலைவாய்ப்பு அலுவகங்களை நிர்வகித்து வருகிறது. இதன் மூலம் அரசு மற்றும் தனியார் துறைகளின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
Advertisement
அந்த வகையில் திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஜமால் முகமது கல்லூரியுடன் இணைந்து வரும் பிப்ரவரி 28ம் தேதி ஞாயிற்று கிழமை அன்று தனியார் வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளது. இது திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் அருகில் உள்ள ஜமால் முகமது கல்லூரியில் நடக்க உள்ளது.
இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் 8600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளது. 8, 10, 12ம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பாரா மெடிக்கல், ஹோட்டல் மேனேஜ்மெண்ட், பி.எட்., பி.ஈ., போன்ற படிப்புகளை முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். முகாமிற்கான அனுமதி இலவசம். மேலும், கலந்து கொள்ள விரும்புபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய