கத்தியை காட்டி பணம் பறித்த இளைஞர் - குண்டர் சட்டத்தில் கைது!!

கத்தியை காட்டி பணம் பறித்த இளைஞர் - குண்டர் சட்டத்தில் கைது!!

Advertisement

திருச்சி கிராப்பட்டி பகுதியை சேர்ந்த அஜீஸ்கான் என்பவர் செந்தண்ணீர்புரம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது, செந்தண்ணீர்புரத்தை சேர்ந்த விஜய், என்பவர் அஜீஸ்கானிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து கொண்டு சென்றுவிட்டதாக பாலக்கரை சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை செய்துள்ளனர்.

Advertisement

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட விஜய், என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேற்படி விசாரணையில் விஜயின் மீது ஏற்கனவே பொன்மலை காவல் நிலையத்தில் 3 வழக்கும், பாலக்கரை காவல் நிலையத்தில் 2 வழக்கும், அரியமங்கலம் காவல் நிலையத்தில் 1 வழக்கும் மற்றும் திண்டுக்கல் டவுன் காவல் நிலையத்தில் 2 வழக்கும் பதிவு செய்யப்பட்டு, வழக்குகள் நிலுவையில் இருந்து வருவது தெரியவந்தது. 

Advertisement

இந்நிலையில் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர், என விசாரணையில் தெரிய வருவதாலும், அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டும் பாலக்கரை சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையின் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் ஆணையின்படி திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் விஜய் என்பவருக்கு குண்டர் தடுப்பு காவல் ஆணை சார்வு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய சிறையில் அடைத்தனர்.