திருச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து - ஒருவர் படுகாயம்

திருச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து - ஒருவர் படுகாயம்

திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாக மங்கலத்தை அடுத்த அழுந்தூர் பகுதியில் டிப்பர் லாரி ஒன்று சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Advertisement

திருச்சி பஞ்சப்பூரில் உள்ள தனியார் லாரி கம்பெனியின் டிப்பர் லாரி ஒன்று இன்று டெஸ்ட் டிரைவ் செய்வதற்காக நிறுவனத்தின் ஊழியர்கள் இருவர் லாரியை தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டி பார்த்துள்ளனர்.

அப்போது நாகமங்கலம் அடுத்த அழுந்தூர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி தேசிய நெடுஞ்சாலையில் மூன்று முறை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் படுகாயமடைந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் இதுகுறித்து மணிகண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu