காவிரி பிரச்னை கேள்வி... ஜகா வாங்கிய ரஜினிகாந்த்

காவிரி பிரச்னை கேள்வி... ஜகா வாங்கிய ரஜினிகாந்த்

லைகா தயாரித்து த.செ.ஞானவேல் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார், பெயரிடப்படாத படத்துக்காக, நேற்று காலை சென் யில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் திருவனந்தபுரம் புறப்பட்டார் ரஜினிகாந்த். முன்னதாக, சென்னை விமான நிலையத்திற்கு காரில் வந்து இறங்கிய அவரை சூழ்ந்து கொண்டு நிருபர்கள் பேட்டி கேட்க, '170வது படத்தின் படப் பிடிப்புக்காக செல்கிறேன்.

அந்தப் படத்துக்கு பெயர் இன்னும் வைக்கவில்லை. நல்ல கருத்துள்ள, பிரம்மாண்டமான பொழுதுபோக்கு படமாக அது இருக்கும். படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும். ஜெயிலர் படத்தின் வெற்றி, நாங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது." என்று தனது ஸ்டைலில் சந்தோஷமாக பேசினார். 

அப்போது நிருபர்கள் கர்நாடகா அரசு காவிரி தண்ணீர் திறந்து விடாதது குறித்து கேட்டனர். அந்த கேள்விக்கு எந்த பதிலும் கூறாமல் ஜகா வாங்கி புறப்பட்டார் ரஜினிகாந்த். காவிரி பிரச்னை வேகமெடுத்து வரும் நிலையில் ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பலர் அழுத்தம் கொடுக்கிற நிலையில், ரஜினி எந்த கருத்தும் சொல்லாமல் சென்றது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision