உதயநிதி ஸ்டாலின் தலையை சீவ முடியுமா - அமைச்சர் நேரு பேட்டி
வ.உ.சிதம்பர பிள்ளையின் 152 வது ஜெயந்தி விழாவினை இன்று திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வ.உ.சி-யின் முழு திருவுருவ சிலைக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு செய்தியாளர்களிடம் பேசும்போது... போர்வெல் எங்கு போட்டாலும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மாவட்ட ஆட்சியரை விட்டு சமாதானம் செய்து தான் சரி செய்யப்படும். மாற்று ஏற்பாடு இருந்தால் அந்த மாற்று ஏற்பாடுகள் செய்வோம். இந்தியா கூட்டணியில் கூட்டணியில் உள்ளவர்களே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு...... அதெல்லாம் ஒரு பேச்சா.
உ.பி மாநிலத்தில் உள்ள சாமியார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி என சொல்லி இருக்கிறார் என்ற கேள்விக்கு..... இதற்கு அமைச்சர் உதயநிதியை சொல்லிவிட்டார் 10 கோடி அல்ல பத்து ரூபாய் கொடுத்தால் சீப்பு வாங்கி தலையை சீவிக் கொள்வேன் என்று சொல்லிவிட்டார். அவரால் சீவ முடியுமா.
எங்களுடைய கொள்கை தந்தை பெரியாருடைய கொள்கை எல்லா மக்களும் சமம் என்ற முறையிலே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் நாங்களும் அந்தக் கொள்கையில் உறுதியாக இருக்கின்றோம். அதை எதிர்க்கின்ற கொள்கையை வேர் அறுப்போம்.
28 பேரும் ஒன்றாக இருப்பார்களா, ஆட்சிக்கு வர வேண்டும் என்ற விஷயத்தில் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். கொள்கை மாறுபாடு இருப்பதெல்லாம் என்கிட்ட கேட்கிறீர்களே. திருச்சி மாநகராட்சி சாலையில் முதல் கட்ட சாலை தான் போடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட சாலை போடப்பட்ட பின் சாலை நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision