ஒரு வழி கட்டண வாடகை கார் ஓட்டுனர்கள்- மாற்று சங்கம் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் - தடியடி

ஒரு வழி கட்டண வாடகை கார் ஓட்டுனர்கள்- மாற்று சங்கம் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் - தடியடி

ஒரு வழி கட்டணம் தொடர்பாக வாடகை கார் ஓட்டுனர்கள் இன்று நம்பர் 1 டோல்கேட் பகுதி மாந்துறை திருமண மண்டபத்தில் நிர்வாகிகள் கூட்டம்  நடத்த காவல்துறை அனுமதி அளித்திருந்தது.  தகவல்யறிந்த மாற்று சங்கத்தினர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுனர். வாடகை கார்கள் தேசிய நெடுசாலையில் குறுக்கு மறுக்காக நிறுத்தபபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்க்கு விரைந்த திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் அவருடன் வந்த அதிவிரைவு படையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும் ஆட்டோ ஓட்டுனர்களும் இந்த ஒரு வழிப்பாதை வாடகை ஓட்டுனர்களை வழிமறித்து கார்களை அடித்தும் கண்ணாடிகளை தட்டியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயபுரம் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் ஒரு வழிப்பாதை ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் கார்களை நிறுத்தி 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 3கீ.மீ தூரம் வாகனங்கள் சாலைகளில் நின்றது.

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்தும் தேசிய நெடுஞ்சாலை யில் போராட்டத்தில் ஈடுபட்ட கார்களையும் பறிமுதல் செய்யவுள்ளோம் என திருச்சி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தகவல் தெரிவித்துள்ளார். போராட்டதால் சுமார் ஒரு மணிநேரம் தேசிய நெடுஞ்சாலை பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn