தவணையில் வாங்கியதோ செல்போன்- டிவி வாஷிங் மிஷின் மிக்ஸிக்கு தவணை கட்ட சொல்லும் திருச்சி தனியார் நிதி நிறுவனம்

தவணையில் வாங்கியதோ செல்போன்- டிவி  வாஷிங் மிஷின் மிக்ஸிக்கு தவணை கட்ட  சொல்லும் திருச்சி தனியார் நிதி நிறுவனம்

திருச்சி பொன்னகர் காமராஜபுரத்தை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் ஏற்கனவே வீட்டு உபயோக பொருட்களை (பஜாஜ்) தனியார் நிதி நிறுவனம் மூலம் மாத தவணையில் பொருட்களை வாங்கி அதற்கான முழுத் தொகையையும் கட்டி முடித்துள்ளார். கடந்த வருடம் அக்டோபர் மாதம் மீண்டும் ஒரு புதிய கைபேசியை பஜாஜ் நிதி நிறுவனம் மூலம் விக்னேஸ்வரன் மாத தவணையில் வாங்கியுள்ளார் .முதல் மாத தவணையில் அவருக்கு குறிப்பிட்ட 3600 ரூபாய் விட கூடுதலாக 5000 ரூபாய் அவரது வங்கி கணக்கில்  எடுக்கப்பட்டது. இதுகுறித்து விக்னேஸ்வரன் தனியார் நிதி நிறுவனத்திடம் முறையிட்டபோது சரிவர பதிலளிக்காததால் அந்நிறுவனத்திடம் மீண்டும் இவர் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்துள்ளார்.

இரண்டாவது மாதத்திலும் அதேபோல் தவணை 5000 ரூபாயாக ப வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.இதை அறிந்து நேரடியாக சென்று அவர் நான் வாங்கிய பொருளுக்கு ஏற்கனவே 3206 ரூபாய் தான். ஆனால் 5ஆயிரம் ரூபாய் கூடுதலாக எடுப்பதாக புகார் தெரிவித்தார். அப்பொழுது அவர்கள் நீங்கள் டிவி ,வாஷிங் மெஷின்,மிக்ஸி ,ஏசி என லிஸ்ட்டை சொல்லி பில்லை (வீனஸ் எலக்ட்ரானிக்ஸ் வினியோகஸ்தர் ) ஆகியவற்றை   வாங்கி உள்ளீர்கள். அதற்கு 61 ஆயிரம் ரூபாய் மொத்தம் வருகிறது .அதனால் கூடுதலாக மாதத் தவணை உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்படுவதாக தெரிவித்தனர்.

அதிர்ந்துபோன விக்னேஸ்வரன் நான் வாங்கியது கைபேசி மட்டும் தான் . ஆனால் மூன்று பொருட்கள் என்னுடைய ஆவணங்களை வைத்து வேறு யாருக்கோ எடுத்துக் கொடுத்து உள்ளீர்கள் என்ன நாயம் என கேட்டுள்ளார். அதன்பிறகு அந்நிறுவன ஊழியர்களிடம் அவர்கள் விசாரணை நடத்தினர். ஆனால் இன்று வரை அவருக்கு பிரச்சனை தீரவில்லை உடனடியாக தில்லை நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபொழுது காவல்துறையினரும் புகாரை விசாரிக்காமல் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன ஊழியரிடம் பேசுங்கள் என தெரிவித்துள்ளனர். 

ஆனால் அந்த பெண் ஊழியரை ஏற்கனவே தனியார் நிதி நிறுவனம் பணிநீக்கம் செய்து விட்டது .தற்பொழுது யாரோ வாங்கிய பொருளுக்கு தன் வங்கி கணக்கில் மாதத் தவணை மூலம் எடுக்கப்படுவது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பி என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார்.

அந்த பெண் ஊழியர் ஏராளமானோரிடம் இதே போல் போலியாக ஆவணங்களை உருவாக்கி ஏமாற்றி உள்ளது. தற்போது தெரிய வந்துள்ளது என விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO