நடிகர் ரஜினி அறிவிப்பு - திருச்சியில் ரஜினி ரசிகர்கள் வெடி வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!!

நடிகர் ரஜினி அறிவிப்பு - திருச்சியில் ரஜினி ரசிகர்கள் வெடி வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் அனைத்தும் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை செய்தார்.

Advertisement

இதனையடுத்து இன்று வரும் டிசம்பர் 31ம் தேதி கட்சி அறிவிப்பு குறித்து ஜனவரி மாதம் தேதியை வெளியிடப்படும் என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ரஜினி ரசிகர்கள் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு பட்டாசு வெடித்து உற்சாகமாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், கொட்டும் மழையில் கொண்டாட்டத்தில் இருந்த ரஜினி ரசிகர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். பின்னர் ரஜினி முதல்வர் வாழ்க என்று மகிழ்ச்சியுடன் கோஷமிட்டனர்.

Advertisement

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS