திருச்சியில் இன்று(29.06.2021) சதமடித்த பெட்ரோல் விலை

திருச்சியில் இன்று(29.06.2021) சதமடித்த பெட்ரோல் விலை

 திருச்சியில் கடந்த சில நாட்களாகவே 99 ரூபாயிலிருந்து 100 ரூபாய்க்கு 20 காசுகள் 30 காசுகள் என குறைவாக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று திருச்சியில் 100 ரூபாய் தொட்டது. இன்று ஒரு லிட்டர் சாதாரண பெட்ரோல் ரூ 100.28 பைசாவிலிருந்து ரூ100.30 காசு வரை விற்பனையாகிறது.  ஸ்பீடு பெட்ரோல் 103 ரூபாய் 48 பைசாவுக்கும் விற்பனையாகிறது. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் ,இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவன  பெட்ரோல் விற்பனை ஒரு பைசா 2 பைசா மட்டுமே வேறுபாடு உள்ளது.

கோவிட் தொற்று காலத்தில் அனைத்து தரப்பினரும் மிகுந்த பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நிலையில் தற்பொழுது திருச்சியிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது சாமானிய மக்களை பெரிதும் பாதிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்தாக உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC