சித்திரை திருவிழா - ஐஸ் கட்டி அலங்காரத்தில் அம்மன்

சித்திரை திருவிழா - ஐஸ் கட்டி அலங்காரத்தில் அம்மன்

சித்திரை மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் இந்து கோவில்களில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் அம்மன் நாள்தோறும் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பின்னர் சிறப்பு பெற்ற கோவில்களில் தேரோட்டம் நடைபெறும்.

தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், கோடை வெப்பம் தனிய வேண்டும். மழை பெய்ய வேண்டிய பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் முசிறி மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் அம்மன் விதவிதமான அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதன்படி நேற்று முசிறி கள்ளர் தெரு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் ஐஸ் கட்டி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision