திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
ஒவ்வொரு வருடமும் சித்திரை திங்கள் முதல் நாள் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும். இந்த வருடம் கொரோனா நோய்த்தொற்று காரணமாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமானது நடைபெற்று வருகிறது.
Advertisement
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் கோவில்களில் திருவிழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடைபெறாது என அறநிலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கமான பூஜைகள் நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் காலை 5:30 முதலே தொடர்ந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் முகக் கவசங்கள் அணிந்தும் சமூக இடைவெளியை பின்பற்றியும் பொதுமக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.