ஆறு கால்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி

ஆறு கால்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி

திருச்சி விமான நிலையம் அருகே திருவளர்ச்சிபட்டி கிராமம் உள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர். இவர் அந்தப் பகுதியில் விவசாயம் பார்த்து வருகிறார். மேலும் இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவர் வளர்த்து வந்த பசுமாடு ஒன்று முதல் முறையாக கருத்தரித்து இருந்தது.

அந்தப் பசு மாடு நேற்று முதலாவதாக ஒரு காலை கன்றை ஈன்றது. அந்தக் கன்றுக்குட்டி ஆறு கால்களுடன் பிறந்திருந்தது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மாட்டின் உரிமையாளர் பன்னீர் விரைந்து கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

ஆனாலும் அந்தக் கன்றுக்குட்டி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் திடமாக ஓடியாடி தாயிடம் பால் குடித்து விளையாட தொடங்கியது. இருப்பினும் கூடுதலாக இருந்த அந்த இரண்டு கால்களை அந்த கன்று குட்டி பயன்படுத்தவில்லை. அசதியாக படுக்கும்போது மட்டும் கன்றுகுட்டி கால்களை மடக்க சிரமப்படுவதாக உரிமையாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று கால்நடை மருத்துவர்கள் கன்றுக்குட்டியை மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர். ஆறு கால்களுடன் பிறந்த அதிசய கன்று குட்டியை அப்பகுதி பொதுமக்கள் முழுவதும் ஆர்வத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO