கள்ளிக்குடி மார்கெட்டில் கடை பெற்றவர்கள் இம்மாதம் இறுதிக்குள் கடையை திறக்க வேண்டும் - ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்!

கள்ளிக்குடி மார்கெட்டில்  கடை பெற்றவர்கள் இம்மாதம் இறுதிக்குள் கடையை திறக்க வேண்டும் - ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்!

திருச்சியில் கள்ளிக்குடி வணிக வளாக வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் கு.ப.கிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கள்ளிக்குடி வளாகத்தை சிறப்பாக நடத்துவது மற்றும் அதனுடைய முழு வளர்ச்சிக்கு பாடுபடுவது எனவும், கள்ளிக்குடி வணிக வளாகத்தில் கடைகள் ஒதுக்கீடு பெற்ற வியாபாரிகள் யாரும் அஞ்ச வேண்டாம். 

Advertisement

இந்த வணிக வளாகத்தின் வளர்ச்சிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் எவர் செயல்பட்டாலும் அவர்களை அம்மாவின் ஆன்மா தண்டித்து நம்மை அரணாக இருந்து காக்கும் எனவும், வணிக வளாகத்தில் செயல்படும் மொத்த வணிகர்கள் விவசாயிகளிடம் பெரும் காய்கறி, பழங்கள் மற்றும் மலர்கள் விற்பனை செய்யும் பொழுது விவசாயிகளிடமிருந்து 5% தரகு‌ மட்டுமே பெற வேண்டும். இந்த 5 சதவீதத்தில் 3 சதவீதம் விற்பனை செய்து கொடுக்கும் முகவருக்கு தர வேண்டும். 

Advertisement

மீதம் உள்ள 2 சதவீதம் மட்டுமே கள்ளிக்குடி வணிக வளாகத்தில் இருக்கும் வணிகர்கள் பெற வேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகம் - சிறைத்துறை, கூட்டுறவு துறை, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறந்த பிறகு விடுதிகள் போன்றவற்றிற்கு தேவைப்படும் காய்கறிகளை கள்ளிக்குடி வணிக வளாகத்தில் இருந்து வாங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்த மாத இறுதிக்குள் (30.11.2020) கள்ளிக்குடி வணிக வளாகத்தில் கடை பெற்றவர்கள் அனைவரும் கடையை திறந்து நடத்த வேண்டும். ஒதுக்கீடு பெற்று வாடகையை கட்டி கடையை நடத்தாமல் இருக்கும் வியாபாரிகளின் ஒதுக்கீடுகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.