தமிழ்நாட்டில் முதன்முறையாக திருச்சி மாநகராட்சியில் நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி போடும் பணி

தமிழ்நாட்டில் முதன்முறையாக திருச்சி மாநகராட்சியில் நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி போடும் பணி

தமிழ்நாட்டில் முதல்முறையாக திருச்சி மாநகராட்சியில் 21770  நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி - மாநகராட்சி மேயர் அன்பழகன் பேட்டி 

திருச்சி மாநகராட்சியில் இதுவரை 43767 ஆயிரம் நாய்கள் இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.இதில் 21,770 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. அந்த நாய்களை தற்போது கண்டறிந்து ரேபிஸ் தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது.முன்னதாக

மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன் கால்நடை மருத்துவர்கள் உடன் நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணியை துவக்கி வைத்தனர். ஒவ்வொரு மாதமும் 5000 நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டுள்ளது.

தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி போடும் பணிகள் பணியின் அவசர அவசியம் கருதி இம்மாநகராட்சியில் நான்கு ABC/ARV மையங்களில் ABC/ARV பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

 கோணக்கரை நாய்கள் கருத்தடை மையம் 

 அம்பேத்கார் நகர் நாய்கள் கருத்தடை மையம்

 அரியமங்கலம் நாய்கள் கருத்தடை மையம்

 பொன்மலைப்பட்டி நாய்கள் கருத்தடை மையம்

இம்மாநகராட்சியில் கடந்த நிதி ஆண்டில் (23-24) 11929 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்ட்டது. நடப்பு நிதி ஆண்டில் (24-25) 9841 தெருநாய்களுக்கும் ஆகமொத்தம் 21770 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணியின் அவசர அவசியம் கருதி தெரு நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இம்மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளில் பரோபரியாக சுற்றித்திரியும் தெருநாய்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கும் பணிகள் ஒப்பந்த அடிப்படையில் M/s. ANIMAL HELPING HANDS. திருச்சி நிறுவனித்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. 43767 தெருநாய்கள் தற்போது இம்மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ளதாக கணக்கெடுப்பு பணி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் கடந்த இரண்டு வருடங்களாக 21770 தெரு நாய்களுக்கு மேல் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ரேபீஸ் தடுப்பூசி செலுத்தி பிடிக்கப்பட்ட இடத்திலேயே திரும்பி விடப்பட்ட நிலையில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாய்களை மீண்டும் இனம் கண்டு 5000 தெருநாய்களுக்கு பூஸ்டர் டோஸ் போடும் பணிகள் மாண்புமிகு மேயர் மற்றும் மாண்புமிகு துணை மேயர் அவர்களால் இன்று துவக்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர், மாநகர் நல அலுவலர், அனைத்து வார்டுகுழு தலைவர்கள் மற்றும் பொது சுகாதாரகுழு தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்

 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision