திருச்சியில் வட்டாட்சியர் கார் சக்கரத்தில் தலை வைத்து விவசாயிகள் போராட்டம்

திருச்சியில் வட்டாட்சியர் கார் சக்கரத்தில் தலை வைத்து விவசாயிகள் போராட்டம்

திருச்சி ஒட்டக்குடி பகுதியில் தெய்வானை என்ற விவசாயி குத்தகைக்கு விவசாயம் செய்து வருகிறார். 25 ஆண்டுகளாக இந்நிலத்தில் விவசாயம் செய்து வரும் இவர் ஒவ்வொரு ஆண்டும் பயிர் கடன் வாங்கி அதனை கட்டியும் கடந்த ஆண்டு இதற்கான தள்ளுபடியும் ஆணையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் இந்த வருடம் விவசாய பணிகளை மேற்கொண்டு வரும் தெய்வானை பயிர்கடனுக்கு விண்ணப்பித்து அதற்கான லோன் தொகையை பெறுவதற்கு தொடர்ந்து வட்டாட்சியரை நாடியுள்ளார். திருவெறும்பூர் வட்டாச்சியர் செல்வ கணேஷ் லோன் தர முடியாது என்று தெய்வானையிடம் கூறியதாக விவசாயிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியரிடம் இதனை குறிப்பிடும் போது அவர் பரிந்துரை செய்தும், மீண்டும் தாசில்தார் பயிர்க் கடனுக்கான லோனை தராததால் விவசாயிகள் ஆத்திரமடைந்தனர். திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த திருவரம்பூர் தாசில்தார் காரை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு விவசாயி தாசில்தார் கார் சக்கரத்தின் அடியே தன் தலையை வைத்து படுத்திருந்தார். சுமார் ஒரு மணி நேரம் இந்த போராட்டம் நடைபெற்றது. பின்பு அதிகாரிகள் சமாதானப்படுத்தியதால் விவசாயிகள் கலைந்து சென்றனர். மீண்டும் அவருக்கு பயிர்க்கடன் லோன் கிடைக்கவில்லை என்றால் திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை இடப்படும் என விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn