பிரசித்தி பெற்ற உறையூர் வெக்காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் -ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பிரசித்தி பெற்ற உறையூர் வெக்காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் -ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் சிறப்பு வாய்ந்தது திருச்சி உறையூரில் உள்ள வெக்காளியம்மன் ஆலயம்.

பிரசித்திபெற்ற இவ்வாலயத்தில் அம்மன் மக்களின் குறைதீர்ப்பதற்காக மேற்கூரையின்றி அருள்பாலித்து வருகிறார். 

இவ்வாலயத்தில் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்வதாலும், தங்களது குறைகளை பேப்பரில் எழுதி கொடி மரத்தின் அருகில் உள்ள பகுதியில் கட்டி விட்டால் திருமணத்தடை, மற்றும் புத்திர தோஷம் நீங்கும், கல்வி தொழில் வளரும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. 

இத்தகைய சிறப்பு வாய்ந்த உறையூர் வெக்காளியம்மன் திருக்கோவிலில் 12 ஆண்டுக்கு ஒரு முறை ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம், அதன்படி திருக்கோவில் அர்த்தமண்டபம் கருங்கற்களால் கட்டப்பட்டு அதனைத் தொடர்ந்து திருக்கோவில் புணர் அமைப்பு செய்யப்பட்டு திருப்பணிகள் நிறைவுற்றது.

கடந்த 1-ம் தேதி விக்னேஸ்வர பூஜை உடன் யாகசாலை பூஜை தொடங்கி, புனித நதியான காவேரியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்க்க கூட ஊர்வலத்துடன் தொடர்ந்து யாகசாலை பூஜை எட்டு காலமாக நடைபெற்றது

இன்று காலை எட்டாம் கால யாகசாலை பூஜை பூர்ணாகதியுடன் நிறைவு பெற்றதை அடுத்து புனித நதியான காவிரியில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த புனித நீர் கோயில் கோபுர கலசங்களுக்கு ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் மூலவர் வெக்காளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்ற நிகழ்வு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO