திருச்சியில் மண்ணிண் மைந்தருக்கு வாய்ப்பு கேட்டு போஸ்டர்
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கி உள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டின் மையப் பகுதியில் இருக்கக்கூடிய திருச்சி எம்.பி., தொகுதியை பிடிப்பதில், தி.மு.க.. கூட்டணிக்குள்ளேயே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அதேபோல், தற்போது திருச்சி நாடாளுமன்ற தொகுதி அறந்தாங்கியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியைச் திருநாவுக்கரசர் எம்.பி.,யாக உள்ளார்.
தி.மு.க. கூட்டணியில் திருச்சி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில், அவர் மறுபடியும் இங்கு போட்டியிட கட்சி தலைமையிடத்தில் விருப்பம் தெரிவித்துள்ளார். அதேபோல், கடந்த முறை திருச்சி தொகுதியில் போட்டியிட, தன் தந்தையுடன் பழகிய காங்., முக்கிய தலை வர்கள் மூலம் பகீரத முயற் சிகள் செய்த, காங்., மாநில செயற்குழு உறுப்பினர் ஜோசப் லுாயிஸ், இம்முறை யும் திருச்சியில் போட்டியிட விரும்புகிறார். திருச்சியில் தொழிலதிபரான பிரபல ஜோசப் லுாயிஸ் தந்தை அடைக்கலராஜ், காங்கிரஸ் கட்சி சார்பில் 1984-ம் ஆண்டு முதல், 1998-ம் ஆண்டு வரை தொடர்ந்து நான்கு முறை இருந்தவர்.
ஆகையால், இம்முறை ஜோசப்லுாயிசுக்கு திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என அக்கட்சியினர், கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தபால் எழுதி அனுப்பி கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மறைந்த எல்.அடைக்கலராஜ் EX-MP, புதல்வர் மண்ணின் மைந்தன் ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜூக்கு திருச்சி பாராளுமன்ற வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்த வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேருவிடம் மனுவாக கொடுக்கப்பட்டது. ஏற்கனவே, தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை, வரவில்லை என்ற குற்றச்சாட்டுள்ள நிலையில், தற்போது வெளியூர்க்காரர் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்து, காங்கிரஸ், கட்சியினரே களம் இறங்கி உள்ளது திருநாவுக்கரசருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாநகர் முழுவதும் காங்கிரஸ் கட்சி திருச்சி மனித உரிமைத்துறை முன்னாள் தலைவர் சார்லஸ் பெயரில், மண்ணின் மைந்தன் என்ற தலைப்பில் சுவரொட்டி பல இடங்களில் ஒட்டப்பட்டு இருந்தன. அதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியே... வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திருச்சி மண்ணின் மைந்தனுக்கே... காங்கிரஸ் கமிட்டி மாநில செயற்குழு உறுப்பினர், ஏ.ஜோசப் லூயிசை வேட்பாளராக நியமிக்க திருச்சி முன்னாள் காங்கிரஸ் மனித உரிமை துறை சார்பாக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்று வாசகங்கள், மற்றும் நிர்வாகிகளின் புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தன. இந்த சுவரொட்டியால் திருச்சி மாநகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision