ஆடு திருடிய நபர்களை பிடித்த திருச்சி எஸ்எஸ்ஐ வெட்டி கொலை

ஆடு திருடிய நபர்களை பிடித்த திருச்சி எஸ்எஸ்ஐ வெட்டி கொலை

திருச்சி மாவட்டம், நவல்பட்டு சோழமாநகர் பகுதியில் வசித்து வந்தவர் பூமிநாதன்  இவருக்கு கவிதா என்ற மனைவியும், குகன் என்ற மகனும் உள்ளனர். பூமிநாதன் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்துள்ளார். இவர் வழக்கம்போல் நேற்று இரவு ரோந்து பணியில் இருந்தபோது சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் நவல்பட்டு ரோட்டில் நள்ளிரவு 2 மணி அளவில் மூன்று இரு சக்கர வாகனங்களில் ஆடுகளுடன் வந்த நபர்களை தடுத்து நிறுத்தியுள்ளார். அப்போது அவர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளனர். ஆடுகளை திருடும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதை தெரிந்துகொண்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்றுள்ளார்.

அப்போது புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர் ரயில்வே கேட் பகுதியிலுள்ள பள்ளப்பட்டி என்ற ஊரில் ஒரு இருசக்கர வாகனத்தில் சென்ற திருடனை பிடித்து நவல்பட்டு காவல் நிலைய போலீசார் சேகரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது மற்ற இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த திருடர்கள் எங்களை விடுமாறு பூமிநாதனை திருடர்கள்  மிரட்டியுள்ளனர்.
அவர் விடாததால் திருடர்கள் பூமிநாதன் அரிவாளால் வெட்டி தப்பி சென்றுள்ளனர்.

மேலும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.
பள்ளப்பட்டி பகுதியில் உள்ள பொதுமக்கள் அந்தப் பகுதிக்கு 5 மணி அளவில் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது இறந்த காவலரை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் புதுக்கோட்டை போலீசாரும், திருச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஐஜி பொறுப்பு கார்த்திகேயன், டிஐஜி சரவணன் சுந்தர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இரண்டு டிஎஸ்பிக்கள், இரண்டு காவல் ஆய்வாளர், இரண்டு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 14 பேர் கொண்ட 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை செய்து வருகின்றனர். ஆடு திருடர்களை விரட்டிச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் வெட்டிப்படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn