திருச்சி எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை நடந்தது என்ன ? 8 கிலோமீட்டர் தூரம் சேசிங் தனியாக திருடர்களிடம் மாட்டியது எப்படி?

திருச்சி எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை நடந்தது என்ன ? 8 கிலோமீட்டர் தூரம் சேசிங் தனியாக திருடர்களிடம் மாட்டியது எப்படி?

திருச்சி நவல்பட்டு காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐ ஆக பணிபுரிந்து வந்தவர் பூமிநாதன். இவர் வழக்கம் போல் நேற்று இரவு இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார் .அவருடன் தலைமை காவலர் சித்திரவேலுரும் பணியில் இருந்தார். அப்போது ஒரு இரு சக்கர வாகனம் அவ்வழியே வந்த  2 பேரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொள்ள முற்பட்டுள்ளார். அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

உடனடியாக தனது இருசக்கர வாகனத்தில் அவர்களை துரத்தி பிடிக்க சென்றார். அவர்களும் வேகமாக செல்ல இவரும் அவர்களை பிடிக்க வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். திருச்சி மாவட்டம் பூலான் கொடியிலிருந்து கீரனூர் பள்ளத்துபட்டி வரை எட்டு கிலோமீட்டர் தூரம் அவர்களை சேஸிங் செய்து பிடித்துள்ளார் .அவரிகளிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது காவல் நிலையத்திற்கு கைப்பேசி மூலம் தகவல் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது அந்த இருவரும் இவர் கையில் இருந்த கைபேசியையும் வாக்கி டாக்கியையும் பிடுங்கி அருகிலிருந்த தண்ணீருக்குள் வீசியுள்ளனர்.

2பேரும் அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சி மேற்கொண்டுள்ளனர். பூமிநாதன் அவர்களைப் பிடித்து ஓடிவிடாமல் தடுத்துள்ளார் .உடனே அவர்கள் அரிவாள் மட்டும் கையில் வைத்திருந்த ஆயுதங்களை வைத்து பூமிநாதனை தலையில் வெட்டி தாக்கியுள்ளனர் .பூமிநாதன் சம்பவ இடத்திலேயே  நிலைகுலைந்து சரிந்து உள்ளார். அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இவரது பின்பு இருசக்கர வாகனத்தில் வந்த தலைமைகாவலர் சித்திரவேல் வழி தெரியாமல் வேறு இடத்திற்கு சென்று சிறிது நேரத்தில் அப்பகுதிக்கு வந்துவிட்டார். அப்பொழுது பூமிநாதன் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இறந்து கிடந்துள்ளார். உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பிறகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் டிஐஜி உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அதன்பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்பொழுது அவரது உடல் பிரேத பரிசோதனை முடிவடைந்துவிட்டது. திருச்சி சரக டிஐஜி சரவணன சுந்தர் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அவர் அதிகாலை 3:00 மணி அளவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இறந்திருக்கலாம் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சிறப்பு எஸ்.ஐ குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி உதவி அறிவித்துள்ளது தமிழக அரசு.ஆடு திருடர்களால் கொலை செய்யப்பட்ட திருச்சி நவல்பட்டு எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளீயிட்டுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn