வளர்ச்சி திட்ட பணிகளை மேயர் நேரில் ஆய்வு

வளர்ச்சி திட்ட பணிகளை மேயர் நேரில் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 5வது மண்டலம், 27வது வாடு மூலை கொல்லை தெரு மாநகராட்சிஉருது பள்ளி ரூபாய் 66 லட்சம் மதிப்பீட்டில் 23 ஆயிரம் சதுர அடியில் மூன்று வகுப்பறைகள், ஒரு தலைமை ஆசிரியர் அறை, நூலகம் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ், சமையல்அறை மற்றும் கழிவறைகள் கூடிய பள்ளி கட்டிடம் அமைகிறது பள்ளி கட்டுமான பணிகளை மேயர் மு. அன்பழகன் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

இதே போல் பென்சினர் தெருவில் ஜெனரல் பஜார் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ரூபாய் $9 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படும் இடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பாபு செட்டி தெருவில் நியாய விலை கடை கட்டுவதற்கான இடத்தினையும் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து 26 வது வார்டு இராமலிங்க நகர் 2வது, 3வது மற்றும் நான்காவது தெருகளில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதனை மேயர் நேரில் ஆய்வு செய்து சாலையை தரமாகவும் உரிய அளவுகளின் படி சாலை அமைக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரை வழங்கினார். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி #எனது குப்பை_எனது பொறுப்பு எனும் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் மண்டலம் 5க்குட்பட்ட 13வார்டுகளில் கழிவுகளை தரம் பிரித்தல் குறித்தும், நெகிழி பயன்பாட்டை தவிர்த்து துணிப்பை பயன்படுத்த அறிவுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய 13 தூய்மை பணியாளர்களுக்கு ஐந்தாவது மண்டல அலுவலகத்தில் மேயர் மு. அன்பழகன் பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

முன்னதாக 25வது வார்டு ஆர்சி பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு திருச்சி இயன் முறை மருத்துவர்கள் பெருமன்றம் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது முகமை மாண்புமிகு மேயர் அவர்கள் பார்வையிட்டார்கள். இந்நிகழ்வில் மண்டல தலைவர் விஜயலட்சுமி கண்ணன். உதவி ஆணையர்திரு சதீஷ்குமார், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா, இளநிலை பொறியாளர் பிரசாதமற்றும் மாமன்ற உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision