திருச்சியில் காவல் நிலையத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர் - வாகன ஓட்டிகள் சிரமம் புகார்

திருச்சியில் காவல் நிலையத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர் - வாகன ஓட்டிகள் சிரமம் புகார்

திருச்சி மாநகரின் முக்கியமான பகுதியான கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள காவல் நிலையம், கட்டுப்பாட்டறைக்கு பின்புறம் உள்ள சாலையில் கழிவு நீர் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வருகிறது.

இது தொடர்பாக மாநகராட்சிக்கு பலமுறை புகார் கொடுத்தும் காவல் நிலையத்திலிருந்து வெளியேறும் கழிவு நீரை தடுத்து நிறுத்தவில்லை என திருச்சி விஷன் நேயர்கள் புகார் தெரிவித்துள்ளனர். உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தற்பொழுது கோரிக்கை வைத்துள்ளனர்.

அப்பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் இச்சாலையில் பயணிக்கும் போது பெரும் சிரமத்திற்கு ஆளாவதாக தெரிவித்துள்ளனர். முக்கியமாக இரண்டு சக்கர வாகனங்களிலும் நடந்து செல்வோர் மீது கார்களில் வருபவர்கள் அந்த சாலையில் தேங்கியுள்ள கழிவு நீர் தங்கள் மேல் தெளித்து விட்டு செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

காவல் நிலையத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரால் சாலையில் பெரிய பள்ளம் உருவாகி கழிவுநீர் சாலையில் தேங்கி ஓடிக்கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளனர். இரவு நேரங்களில் அப்பகுதியில் வயதானவர்கள் குழந்தைகள் செல்லும் பொழுது அச்சத்துடன் செல்வதாகவும், மாநகராட்சி உடனடியாக காவல் நிலையத்திலிருந்து வெளியேறும் சாக்கடை நீரை உடனடியாக தடுத்து நிறுத்தி சாலையை சீர்படுத்தி தர வேண்டும்.

மேலும் அந்த சாலை இரண்டு ஓரங்களிலும் விபத்துக்குள்ளான கார்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன சில சமயம் பேருந்துகளும் நிற்கிறது. சாலை மிகவும் குறுகியதாக இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. உடனே மாநகராட்சி ஆணையர், மேயர் தீர்வு காண வேண்டும் என அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision