60 நாள் திணறலுக்கு நாளை விடிவு காலம்

60 நாள் திணறலுக்கு நாளை விடிவு காலம்

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ஜி கார்னர் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலை ரயில்வே மேம்பாலத்தில் ஒரு பகுதி சரிந்ததால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனையடுத்து தென் மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் மற்றொரு பாலத்தின் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன.

நெடுஞ்சாலைத்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பாலம் சீரமைக்கும் பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. 60 நாட்களுக்கு பிறகு பணிகள் முடிவடைந்து மீண்டும், ஐஐடியில் இருந்து பேராசிரியர் அழகு சுந்தரம் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினரால் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது வாகன போக்குவரத்தை தொடங்கலாமா? பாலத்தின் உறுதித் தன்மை அனைத்தையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த பின் மீண்டும் இந்த பாலத்தில் போக்குவரத்து தொடங்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்

இந்தப் பாலத்தின் உறுதி தன்மையை சோதனை செய்ய பாலத்தின் கீழ் பகுதியில் ஒரு சென்சார் பொருத்தப்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி அந்த பாலத்தின் சேதமடைந்த மேல் பகுதியில் 30 டன் எடை கொண்ட லாரியை நிறுத்தி வைத்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் பாலப்பகுதி ஒரு மைக்ரோ மில்லி மீட்டர் அளவு கீழ இறங்கினால் மீண்டும் சீரமைப்பு பணி தொடரும். ஆனால் இந்த ஆய்வின் முடிவில் பாலத்தின் உறுதித்தன்மையை நிரூபிக்கப்பட்டதால் நாளை (12.03.2024) காலை முதல் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை ஜிகார்னர் மேம்பாலத்தில் போக்குவரத்து தொடங்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பாலப்பணிகளால் கடந்த 60 நாட்களாக அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை முதல் பெருமூச்சு விடுவது வாகன ஓட்டிகள் மட்டுமல்ல, போக்குவரத்து காவலர்களும் தான்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision