நாங்கள் UnConditional - திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி

நாங்கள் UnConditional - திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலையிலுள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் அமமுக பொது செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், அமமுகவின் நிபந்தனையற்ற ஆதரவை நான் பாஜகவிற்கு கொடுத்திருக்கிறேன். நரேந்திர மோடி தான் பிரதமராக போகிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.

நாங்கள் unconditional ஆக தொடர்ந்து நாங்கள் பா.ஜ.கவிற்கு ஆதரவு கொடுத்து வந்தோம். நாங்கள் எத்தனை இடத்தில் போட்டியிடுகிறோம்? எத்தனை தொகுதி எங்களுக்கு கொடுக்கிறார்கள் என்பதெல்லாம் முக்கியமல்ல. குறிப்பிட்ட சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என்று பாஜக போன்ற எந்த கட்சிகளும் எங்களுக்கு வற்புறுத்தவில்லை. நிபந்தனையற்ற ஆதரவை நாங்கள் பாஜகவிற்கு தருகிறோம் என்பதை நாங்கள் தெரிவிக்கின்றோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும். கிருஷ்ணா ரெட்டி உள்ளிட்ட பாஜகவை சேர்ந்த தலைவர்கள் நன்கு அறிமுகமானவர்கள். அடுத்து அடுத்து பேச்சுவார்த்தை இருக்கும்.

அமமுக , பா.ஜ.கவிற்கு ஆதரவு அளிக்கிறது. அதிகாரப்பூர்வமாக அண்ணாமலை இன்று என்னிடம் தொடர்பு கொண்டார். இந்த காலகட்டத்திற்கு தமிழ்நாட்டிற்கு எது தேவையோ அதன் அடிப்படையில் நாங்கள் கூட்டணி அமைத்திருக்கிறோம். அம்மா இல்லை என்றாலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அவர்களது லட்சியத்தை தாங்கி செல்கிறோம். எங்களுடைய நிலைப்பாடு தற்போது பாஜகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவை தருகிறோம் என கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision