பால் பாக்கெட்டுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு

பால் பாக்கெட்டுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருச்சி மாவட்டத்தில் இருக்கும் ஆவின் பால் விற்பனை முகவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். திருச்சி மாவட்ட ஆவின் நிர்வாகம் கடந்த 15 நாட்களில் வயலட் நிறத்தில் புதிய பால் பாக்கெட்களை அறிமுகம் செய்து விற்பனையில் உள்ளது. ஏற்கனவே உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்டு வந்த பச்சை நிற பால் பாக்கெட்கள் நாளை முதல் 15 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட உள்ளது.

பச்சை நிறப்பால் பாக்கெட்டில் கொழுப்புச்சத்து 4.5 சதவீதத்துடன் ஒரு லிட்டர் பால் பாக்கெட் 43 ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு இருந்தது. இந்த பால் பாக்கெட்டிற்கு பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு இருந்து வந்தது. இந்நிலையில் பச்சை நிற பால் பாக்கெட் உற்பத்தி நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது விற்பனைக்கு வந்துள்ள வயலட் நிற பால் பாக்கெட்டில் 3.5% கொழுப்புச்சத்தும் லிட்டர் ரூ.50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இந்த விலை ஏற்றம் குறித்த தகவல் இதுவரை பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவில்லை. மேலும் விற்பனை முகவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 6 சதவீத கமிஷன் தொகை 2.5%மாக குறைக்கப்பட்டுள்ளது.

இது விற்பனையாளர்களுக்கு வருவாய் இழைப்பை ஏற்படுத்துவதோடு, பொதுமக்கள் இந்த புதிய பால் பாக்கெட்டை வாங்குவதில் அவர்களுக்கு பன்மடங்கு சிரமம் ஏற்படும். எனவே ஆவின் நிர்வாகம் பச்சை நிற பால் பாக்கெட்டை தொடர்ந்து உற்பத்தி செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். அதேபோல் விற்பனை முகவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அதே 6 சதவீத கமிஷன் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி விற்பனையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision