சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் குண்டர் சட்டத்தில் கைது

சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் குண்டர் சட்டத்தில் கைது

கடந்த 25.03.22-ம்தேதி பொன்மலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜீ கார்னர் வேகத்தடை அருகே நடந்து சென்ற நபரிடம் செல்போனை பறித்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரி ஆந்தை (எ) வினோத்குமாரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில் எதிரி ஆந்தை (எ) வினோத்குமார், திருச்சி மாநகரில் ஓடும் பேருந்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன் திருடிய வழக்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் திருடிய வழக்குகள் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் 7 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

கடந்த 14.05.22-ம்தேதி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்னூர் பகுதியில் வசித்து வரும் சிறுவனுக்கு பாலியல் தொல்லை தந்ததாக சிறுவனின் தாய் கொடுத்த புகாரின்பேரில் எதிரி பிரபு 38/22 த.பெ. வெள்ளைச்சாமி என்பவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, எதிரிகள் ஆந்தை (எ) வினோத்குமார், மற்றும் பிரபு ஆகியோர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், கத்தியை காண்பித்து செல்போன் மற்றும் பணம் பறிப்பதும், இருசக்கர வாகனத்தை திருடுபவர், என விசாரணையில் தெரிய வருவதால், மேற்கண்ட எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், அவர்கள் மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO