நானும் டான் தான் - திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் கல்லூரி நாள் விழா, கல்லூரி வரலாற்றை தொகுக்கும் பெருந்திட்ட தொடக்க விழா, புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் உரையாற்றினார்.
இதில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் நேரில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில்..... நான் டான் படம் பார்த்தேன். ஜமால் முகமது கல்லூரியில் படித்த நானும் கடைசி பெஞ்ச் மாணவன் தான். சரியாக படிக்காததால் பல அவமானங்களை சந்திதுள்ளேன். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தி நன்கு படிக்க வேண்டும். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அவர்களின் அடித்தளத்தை உருவாக்கும் வேலைக்கு உறுதுணையாக இருப்போம்.
நான் இந்த கல்லூரியில் படித்து சான்றிதழ் வாங்கவில்லை. ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பின் இந்த கல்லூரியில் சான்றிதழ் வாங்கினேன். ஏனென்றால் இங்கு தான் வாக்கு எண்ணிக்கை நடந்தது.
மாணவர்களின் கல்விக்கு என்ன தேவையோ அதை நாங்கள் செய்து தர தயாராக இருக்கிறோம். 3 ஆம் வகுப்பிலிருந்தே நுழைவு தேர்வு வைத்து பா.ஜ.க வினர் எப்படியாவது நுழைய பார்க்கிறார்கள் அவர்களை நுழைய விடாமல் செய்வது மாணவர்களின் கையில் இருக்கிறது. புதிய கல்வி கொள்கையை எதிர்த்து போராட வேண்டும் என அமைச்சர் பொன்முடி கூறியதை புரிந்து கொள்ள வேண்டும்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLanO