திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட ராபர்ட் பயஸ்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர்களாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் கடந்த நவம்பர் மாதம் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் மத்திய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
அதில் முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் (59) ஆகிய 4 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பும் வரை திருச்சியில் மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டினருக்கான சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ராபர்ட் பையஸ்க்கு உடல்நல குறைவு ஏற்பட்டதன் காரணமாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் ராபர்ட் பயஸ் அழைத்துவரப்பட்டார்.
தொடர்ந்து மருத்துவர்கள் அவரது உடல் நலனை பரிசோதித்தனர். இரத்த அழுத்தம் காரணமாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதாகவும், ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn