கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படக் கண்காட்சி

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படக் கண்காட்சி

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 
வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படக் கண்காட்சி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 07.03.2022 முதல் 12.03.2022 வரை 
நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து திருச்சி செயின்ட் ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் குளிரூட்டப்பட்ட 
அரசுப் பேருந்தில் வடிவமைக்கப்பட்ட கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு இன்று (07.03.2022) தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு குறித்து குளிரூட்டப்பட்ட அரசுப் பேருந்தில் அமைக்கப்பட்டுள்ள நகரும் புகைப்படக் கண்காட்சியினை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகள் பார்த்து 
அறிந்து கொள்ளும் வகையில் உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று (07.03.2022) திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் இந்த நகரும் புகைப்பட கண்காட்சி பேருந்து நிறுத்தப்பட்டு இப்பள்ளி மற்றும் அருகாமையிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிடுகின்றனர்.

இதே போல் நாளை (08.03.2022) சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள மேலசிந்தாமணி, இ.ஆர்.மேல்நிலைப் பள்ளியிலும், புதன்கிழமை (09.03.2022) திருவெறும்பூர் வட்டத்திற்குட்பட்ட முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளியிலும், வியாழக்கிழமை (10.03.2022) இலால்குடி வட்டத்திற்குட்பட்ட இலால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், வெள்ளிக்கிழமை (11.03.2022) முசிறி வட்டத்திற்குட்பட்ட அமலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், சனிக்கிழமை (12.03.2022) துறையூர் வட்டத்திற்குட்பட்ட ஜமீன்தார் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியிலும் இந்த நகரும் புகைப்படக் கண்காட்சி மாணவ, மாணவிகளுக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது.

காட்சிப்படுத்தப்படும் இடத்திலுள்ள பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பள்ளிகளின் மாணவ, மாணவிகள் இந்த புகைப்படக் கண்காட்சியைப் பார்த்து பயன்பெறும் வகையில் உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலக உதவி இயக்குநர் செந்தில் குமார், அரசு போக்குவரத்துக் கழக உதவி மேலாளர் நேரு, உதவிப் பொறியாளர் ராஜசேகர், பள்ளி தலைமையாசிரியர் சைமன் சுகுமார் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO