அழுகிய முட்டைகளில் கேக், பிரட் தயாரிப்பு - இரண்டு பேக்கரிக்கு சீல்

அழுகிய முட்டைகளில் கேக், பிரட் தயாரிப்பு - இரண்டு பேக்கரிக்கு சீல்

பொது மக்களிடம் இருந்து வரப்பெற்ற புகாரை அடுத்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் R.ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு திருச்சிராப்பள்ளி மாவட்டம் தென்னூர் ஆழ்வார்தோப்பில் இரண்டு பேக்கரிகளில் ஆய்வு செய்யப்பட்டது.

மேற்கண்ட ஆய்வின் போது நாமக்கல்லில் இருந்து அழுகிய முட்டைகளை மொத்தமாக கொள்முதல் செய்து கேக் மற்றும் பிரட்டுகள் தயார் செய்வதற்கு பயன்படுத்தியது தெரிய வந்தது. ஸ்டார் பேக்கரி, அசாருதீன், ஒ.பாலம், ஆழ்வார் தோப்பு மற்றும் ஸ்ரீ ஆண்டவர் பேக்கரி கருணாகரன் ஆழ்வார் தோப்பு தென்னூர் ஆகிய இரண்டு தயாரிப்பு நிறுவனங்களிலும் சுமார் 8000 அழுகிய முட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

அழுகிய முட்டைகள் கொண்டு தயார் செய்த 215 கிலோ பேக்கரி உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் அவர்களின் உணவு பாதுகாப்பு உரிமமும் ரத்து செய்யப்பட்டு இரண்டு பேக்கரி தயாரிப்பு நிறுவனமும் தற்காலிகமாக உற்பத்தி நிறுத்திவைவைக்கப்பட்டு சீல் செய்யப்பட்டது.

மேலும் மேற்கண்ட பேக்கரிகள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006 பிரிவு 58ன் படி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட அலுவலர் கூறுகையில் இது போன்ற போன்ற அழுகிய முட்டைகளையோ து. மேலும் மாவட்ட நியமன யா காலாவதியான பொருட்களையோ கொண்டு உணவு பொருட்கள் தயார் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கு தொடரப்படும் என்று கூறினார்.

இந்த ஆய்வின்போது உணவு பாதுகாப்பு அலுவலர்களாகிய பொன்ராஜ், செல்வராஜ், மகாதேவன், ஷீபா, செல்வி. ஹர்ஷவர்த்தினி மற்றும் ஆயுதப்படை காவலர்களும் உடனிருந்தனர். மேலும் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் R.ரமேஷ்பாபு கூறுகையில்..... திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களோ அல்லது கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களா அல்லது சுகாரமற்ற முறையில் உணவு தயாரிப்பில் ஈடுபட்டு விற்பனை செய்வது தெரிய வருமாயின் கீழ்கண்ட தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரியபடுத்த வேண்டும் என்றும், தகவல் அளிப்போரின் தகவல் ரகசியம் காக்கப்படும் என்றும் கூறினார்.

மாவட்ட புகார் எண் : 96 26 83 95 95

மாநில புகார் எண் : 94 44 04 23 22

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision