தீபாவளி திருடர்களை பிடிக்க 185 கேமராக்கள் - மாநகர காவல் ஆணையர் தகவல்

தீபாவளி திருடர்களை பிடிக்க 185 கேமராக்கள் -  மாநகர காவல் ஆணையர் தகவல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகரில் தீபாவளி திருடர்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இதைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் நகை பறிப்பு சம்பவங்கள் நடப்பது வழக்கம். இந்தநிலையில் தீபாவளி திருடர்களை பிடிக்க மாநகர போலீசார் வழக்கம்போல சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

அதன்படி திருச்சி மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், மார்க்கெட்டுகள் மற்றும் என்எஸ்பிரோடு, பெரிய கடைவீதி, சின்னகடைவீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 185ற்கும் மேற்பட்ட நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும் சிங்காரத்தோப்பு, மலைவாசல், நந்தி கோவில் தெரு உள்ளிட்ட ஆறு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

மேலும் அனைத்து கண்காணிப்பு கேமராக்களை கண்காணிக்கும் வகையில் தெப்பக்குளம் பகுதியில் காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து திருச்சி மாநகரில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களையும் கண்காணிக்க முடியும்.இதனை இன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநகர காவல் ஆணையர் காமினி கூறுகையில்... திருச்சி தெப்பக்குளம், என்எஸ்பி ரோடு மற்றும் மலைக்கோட்டை பகுதிகளில் 185 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் பணி புரியும் பெண்கள் மற்றும் கடைகளுக்கு வந்து செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்கருதி முதன் முறையாக பெண் காவலர்கள் மப்டியில் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அது மட்டுமின்றி நான்கு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

தரைக் கடைகளை மாற்று இடங்களில் அமைத்து நெரிசலை குறைக்க மாநகராட்சியுடன் இணைந்து செயல்படுத்த ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து கழகத்தின் உதவியுடன் மண்ணார்புரத்தில் இருந்து பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

பண்டிகை முன்னிட்டு 200போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், இதுமட்டுமின்றி தமிழ்நாடு சிறப்புகாவல்படையை சேர்ந்த 35 போலீசாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் தீபாவளி பண்டிகை நெருங்கும்பட்சத்தில் எண்ணிக்கை அதிகரிக்கும்.

தீபாவளி பண்டிகையின் நெருங்கும் நாட்களில் கூடுதல் நேரம் கடையை திறக்க அரசு விதிமுறைக்கு உட்பட்டு செயல்படுத்தப்படும் அதேநேரம் அவ்வாறு செயல்படும் கடைகளுக்கு முழு ஒத்துழைப்பு காவல்துறை தரப்பில் அளிக்கப்படும். செல்போன் பறிப்பில் இளம்சிறார்கள் பெருமளவு ஈடுபபட்டுள்ளனர், அவர்களை நல்வழிப்படுத்தும் பணியில் காவல்துறை ஈடுபட்டுவருகிறது.

திருச்சி மாநகரில் அரசு நிதியுடனும் பொதுமக்கள் பங்களிப்பு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, அவ்வாறு செயல்படாத கேமராக்கள் மாற்றம்செய்யப்பட்டு புதிதாக பொருத்தும்பணியும் அதேநேரம் கூடுதல் கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனியார் பார்க்கிங் மற்றும் கட்டண பார்க்கிங் தற்போது தீபாவளிக்காக செயல் பட்டுள்ளது அதில் மட்டும் வாகனங்களை நிறுத்த வேண்டும், அவர் சாலைகள் நிறுத்தும் வாகனங்களை பறிமுதல் செய்யப்படும்.

திருச்சி மாநகரில் 1145 சிசிடிவி கேமராக்கள் உள்ளது அதில் 850 கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளது, இதனை வாரத்தில் ஒருமுறை கணக்கிட்டு வருகிறோம். ஆபரேஷன் அகழி திட்டத்தில் எங்களது பணியை செவ்வனே செய்து வருகிறோம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision