திருச்சி அருகே ஆன்லைன் சிலம்பப் போட்டி - வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்!

திருச்சி அருகே ஆன்லைன் சிலம்பப் போட்டி - வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்!

தமிழனின் பாரம்பரிய கலைகளில் ஒன்றாகவும், தற்காப்பு கலைகளில் ஒன்றாகவும் விளங்கக் கூடியது சிலம்பம். இந்த சிலம்பப் போட்டி தமிழகமெங்கும் பல்வேறு மாணவ மாணவிகளுக்கு ஊரடங்கு காலத்தில் ஒரு பயனுள்ள பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

அந்த வகையில் திருச்சி மணிகண்டம் அருகே திரி ஸ்டார் சிலம்பம் நாகமங்கலம் கிளை சார்பாக பல்வேறு நிகழ்நிலை(online) சிலம்பப் தனித்திறன் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 

Advertisement

இதில் மாணவி ரித்திகா ஆன்லைன் சிலம்பப் போட்டியில் பரிசு பெற்றுள்ளார். மேலும் இவர் கலாம் வேர்ல்டு ரெக்கார்டு போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

Social Responsibility

இந்நிகழ்ச்சியில் சிலம்ப ஆசிரியர் தேவகுமார், ஹை எனர்ஜி ஜிம் உரிமையாளர் பிரிட்டோ, சிலம்ப ஆசிரியர் மேத்யூ, திரி ஸ்டார் சிலம்பம் தலைவர் கோரா சர்புதீன், சிராஜுதீன் மற்றும் திலோத்தனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm