திருச்சி விமான நிலையத்தில் 24 மணி நேரத்தில் 5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்  -  விசாரணை

திருச்சி விமான நிலையத்தில் 24 மணி நேரத்தில் 5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்  -  விசாரணை
திருச்சி விமான நிலையத்தில் நேற்று(21.11.2020) இரவு சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த இன்டிகோ விமானத்தில் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்போது கடலூர் மாவட்டம் திட்டக்குடி சேர்ந்த சேட்டு என்ற பயணியிடம் சோதனை செய்ததில் பேண்ட் பாக்கெட்டில் பேஸ்ட் வடிவில் 800 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.மற்றொரு பயணியான புதுக்கோட்டையை சேர்ந்த ஹமீது என்ற பயணியிடம் 166.6 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர் .

மொத்தம் 966.5 கிராம் எடையுள்ள  49 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். இன்று(22.11.2020)  திருச்சி விமான நிலையத்திற்க்குதுபையிலிருந்து  வந்த  ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த  
அதிராம பட்டினத்தை சேர்ந்த அகமது நபீல்மற்றும் திருச்சியை சேர்ந்த ரமீஷ் ரஹ்மத்துல்லா இருவரிடம் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர் .

அப்போது மறைத்து எடுத்து வந்த
(3கிலோ 608கிராம்) 3608 கிராம் எடையுள்ள ஒரு கோடியே 87 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்தனர்.  இருவரையும் கைது செய்து  மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள்   விசாரணை நடத்தி வருகின்றனர். 24 மணி நேரத்தில் திருச்சி விமான நிலையத்தில் சுமார் 5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.