மேகதாது அணைகட்ட எதிர்ப்பு தெரிவித்து 500விவசாயிகளுடன் டெல்லிசென்று போராட்டம் - விவசாயசங்கத்தலைவர் அய்யாக்கண்ணு அறிவிப்பு.

மேகதாது அணைகட்ட எதிர்ப்பு தெரிவித்து  500விவசாயிகளுடன் டெல்லிசென்று போராட்டம் - விவசாயசங்கத்தலைவர் அய்யாக்கண்ணு அறிவிப்பு.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் டெல்டா மாவட்ட விவசாய சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று அச்சமயத்தில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கரூர் பைபாஸ் ரோடு சாலையில் உள்ள தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 9டெல்டா மாவட்ட விவசாயிகள் நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தை வடிகால் மாநிலமாக எண்ணாமல் காவிரியில் தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை முறையாக திறந்துவிட வேண்டும், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்திட தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.

விவசாயத்தொழிலுக்கு ஆள்பற்றாற்குறையை போக்க 100நாள் தொழிலாளர்களை விவசாய தொழிலுக்கு பயன்படுத்திட அரசு உத்தரவிட வேண்டும், நெல்லுக்கு குவிண்டாலுக்கு 2500 வழங்கவேண்டும், நெல் கொள்முதல் நிலையங்களில் தினசரி கூடுதல் நெல்லை கொள்முதல் செய்யவும் விவசாயிகளிடம் லஞ்சம் பெறுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் மத்தியகால விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் மற்றும் காட்டு விலங்குகளால் ஏற்படும் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.தமிழக நதிகளை இணைப்பதற்கு தமிழக ஆணையம் அமைக்க வேண்டும், விவசாய விளை பொருளுக்கு லாபகரமான விலை வழங்கவேண்டும் உள்ளிட்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீரை திறக்ககோரியும், மேகதாது அணைகட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்திலிருந்து 500க்கும்மேற்பட்ட விவசாயிகள் டெல்லியில் சென்று போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கானதேதியானது 21ம்தேதி நடைபெறும் மாநிலநிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்றும், கோரிக்கைகள் தொடர்பாக முதல்வரையும் சந்திக்க இருப்பதாக அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

முன்னதாக  நடைபெற்ற மாநில  கூட்டத்தில் தஞ்சை மஹேந்திரன்,  ஒரத்தநாடு தங்கமுத்து, முசிறி கார்த்திகேயன், கடலூர் சாதுக்கூடல் சக்திவேல், திருச்சி மேகராஜன், கரூர் தட்சிணாமூர்த்தி, நகர் ஜான் மெல்கியோராஜ், அரியலூர் பாண்டியன், சிறுகம்பூர் பரமசிவம், திருவாரூர் கக்கரை மனோகரன், புதுக்கோட்டை முருகேசன், லால்குடி தியாகு, மாநில செய்தி தொடர்பாளர்கள் S.பிரேம்குமார், C. வரபிரகாஷ், சட்ட ஆலோசகர்கள் S. முத்துகிருஷ்ணன் B.Sc.BL., முத்துசாமி மற்றும்  மாவட்ட நிர்வாகிகள் வாலையூர் பொன்னுசாமி, அரியலூர் ஆண்டவர், புதுக்கோட்டை ஐயப்பன், ரவி  பிரேம்குமார் - மாநில செய்தி தொடர்பாளர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn