ISO தர சான்றிதழ் பெற்ற காலை உணவு திட்டத்துக்கான சமையலறை!!

ISO தர சான்றிதழ் பெற்ற காலை உணவு திட்டத்துக்கான சமையலறை!!

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருச்சி மாநகராட்சியில் உள்ள பள்ளிகளுக்கு உணவு தயாரிக்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்துக்கான உணவு தயாரிக்கும்

திருச்சி மாநகராட்சியின் மரக்கடை பகுதியில் உள்ள சையது முருதுசா பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் மையப்படுத்தப்பட்ட சமையலறை , தரநிலைப்படுத்தலுக்கான சர்வதேச அமைப்பின் (ஐஎஸ்ஓ) இரண்டு தர மேலாண்மைச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளது.

திருச்சி மாநகராட்சி நிர்வாகம் மூலம் சமையலறை உள்கட்டமைப்பை மேம்படுத்தி, உணவுகளின் தரத்தை நிர்ணயப்படுத்திய பின் ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற கடந்த செப்டம்பர் மாதம் விண்ணப்பித்தது. அதன்பின் மையப்படுத்தப்பட்ட இந்த சமையலறையை ISO இன் பிரதிநிதிகளின் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின்பு இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

வழங்கப்பட்டுள்ள இரண்டு சான்றுகளில் ஒன்று சமையலறையின் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டிற்காகவும், மற்றொன்று உணவு விநியோகத்திற்காகவும் வழங்கப்பட்டுள்ளது. ISO தர சான்றிதழ், ISO (தரப்படுத்தலுக்கான சர்வதேச அமைப்பு) என்பது 168 தேசிய தரநிலை அமைப்புகளின் உறுப்பினர்களைக் கொண்ட அரசு சாரா சர்வதேச அமைப்பாகும். இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவாவில் உள்ளது. அறிவைப் பகிர்ந்துகொள்வதற்கும்,

தன்னார்வ மற்றும் ஒருமித்த அடிப்படையிலான சந்தை தொடர்பான சர்வதேச தரநிலைகளை உருவாக்குவதற்கான நிபுணர்களை ஒன்றிணைக்க்கும் அமைப்பாகும். உலகளவில் உருவாக்கப்படும் புது முயற்சிகளை ஆதரிப்பதுடன், தர நிர்ணயம் தொடர்பான உலகளாவிய சவால்களுக்கு தீர்வுகளையும் வழங்குகிறது.

தர மேலாண்மை, சுற்றுச்சூழல் மேலாண்மை, உடல்நலம் மற்றும் பாதுகாப்பு, ஆற்றல் மேலாண்மை, உணவு பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு ஆகியவற்றிற்கான தரநிலையை உறுதி செய்கிறது. இது சர்வதேச வல்லுநர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு தரநிலையாகும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision