ஜங்ஷன் ரயில்வே பாலம் அருகே முட்புதரில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்த மூதாட்டி

ஜங்ஷன் ரயில்வே பாலம் அருகே முட்புதரில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்த மூதாட்டி

திருச்சி ஜங்ஷன் ரயில்நிலையம் அருகில் சிறப்பு காவல் படை எதிரே உள்ள ரெயில்வே பாலம் அருகில் முட்புதரில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

அவர் திருச்சி கிராப்பட்டி முஸ்லிம் தெருவை சேர்ந்த சவுரிநாயகம் என்பவரின் மனைவி வியாகுலமேரி (88) என்பதும், நேற்று முன்தினம் மாலை மற்றொரு மூதாட்டியுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றநிலையில், நேற்று மாலை அவர் முட்புதரில் பிணமாக கிடந்ததும் தெரியவந்தது. மேலும் அவரது காதுகளில் இருந்த கம்மல்கள் அறுத்து எடுக்கப்பட்டிருந்தன.

அவரது தலையிலும் ரத்தகாயங்கள் இருந்தன. இதனால் அவரை யாராவது அடித்துகொலை செய்து, காதில் இருந்த கம்மலை திருடிச்சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதைத்தொடர்ந்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது இறந்து கிடந்த மூதாட்டியின் காதில் இருந்த கம்மலை மர்ம நபர்கள் திருடிச்சென்றனரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision