ஆட்சியர் மற்றும் எஸ்.பி காரை முற்றுகையிட்ட கூகூர் கிராம மக்கள்

ஆட்சியர் மற்றும் எஸ்.பி காரை முற்றுகையிட்ட கூகூர் கிராம மக்கள்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கூகூர் பகுதியில் செயல்படும் அரசு மணல் குவாரியில் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதாக சமூக ஆர்வலர் சண்முகம், பாரதி மோகன் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுத்திருந்தனர். அந்த வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கூகூர் மற்றும் கோவிலடி மணல் குவாரிகளை நேரில் ஆய்வு செய்து அறிக்கையினை வரும் 16ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென்ற உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த உத்தரவின் கீழ் இன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் வழக்கு தொடுத்த மனுதாரர்கள் சண்முகம், பாரதி மோகன் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர் .

பொது மக்களையும் பத்திரிகையாளர்களையும் ஆய்வு நடக்கும் இடத்திற்கு போலீசார் அனுமதிக்காத நிலையில் ஆய்வுகளை மேற்கொண்ட பின் கூகூர் அருகே பொதுமக்கள் குவிந்திருந்த இடத்தை கடக்க முயன்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரது காரை பொதுமக்கள் முற்றுகையிட்டு மணல் குவாரியில் விதிகளை மீறி மணல் அள்ளியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn