திருச்சி மாநகரில் 1388 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.7,31,750 அபராதம்

திருச்சி மாநகரில் 1388 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.7,31,750 அபராதம்

திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக சத்தியப்பிரியா, பொறுப்பேற்றதிலிருந்து, திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில், சட்ட விரோதமாக செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், வழிப்பறியில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்திட

திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது. அதன்படி, கடந்த ஒரு வார காலமாக திருச்சி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற லோக் அதாலத்தில் திருச்சி மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள தீர்வு காணக்கூடிய 1388 வழக்குகளுக்கு தீர்வுக்காணப்பட்டது.

இதில் கண்டோன்மெண்ட் சரகத்தில் 373 வழக்குகளும், பொன்மலை சரகத்தில் 118 வழக்குகளும்,  கே.கே.நகர் சரகத்தில் 158 வழக்குகளும், ஸ்ரீரங்கம் சரகத்தில் 134 வழக்குகளும், தில்லைநகர் சரகத்தில் 247 வழக்குகளும், காந்திமார்க்கெட் சரகத்தில் 257 வழக்குகளும், மதுவிலக்கு பிரிவில் 101 வழக்குகள் என மொத்தம் 1388 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டும், வழக்கின் ரூ.7,31,750/- அபராதம் விதிக்கப்பட்டது.

திருச்சி மாநகரத்தில் இதுபோன்று லோக் அதாலத் நடைபெறும்போது தீர்வுக்காணகூடிய வழக்குகளை விரைந்து முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn