விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு

விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு

மத்திய அரசு உயர்த்தியுள்ள 58சதவீத உரம் விலையை கண்டித்தும்,  நெல்லுக்கு உரிய விலையை வழங்க வலியுறுத்தி திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு  தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 100க்கு மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷமிட்ட விவசாயிகளிடம் மாநகர காவல் உதவி ஆணையர் மணிகண்டன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் திடீரென அரசு வாகனம் முன்பு படுத்து போராட்டம் நடத்தினர். விவசாயிகளை கலைந்து போக சொன்ன போலீசாரிடம் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  பின்னர் தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து  சம்பவ இடத்துக்கு வந்த  மாநகர காவல்துறை துணை ஆணையர் பவன்குமார் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வருமாறு விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் மனு அளித்த விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr