எங்களை வாழ விடுங்கள் மேடை மெல்லிசை கலைஞர்கள் மனு

எங்களை வாழ விடுங்கள் மேடை மெல்லிசை கலைஞர்கள் மனு

உலகம் முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து உள்ள நிலையில் இந்தியாவில் அதனை தடுக்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள மாநிலங்களில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தி இந்நோயில் இருந்து காப்பாற்ற அந்தந்த மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு விதிமுறைகளையும், சட்டங்களையும் அமல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மேடை மெல்லிசை இசைக்கலைஞர்களின் குடும்பங்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களுடைய வாழ்வாதாரத்தை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் மத்திய, மாநில அரசுகள் திருமணம், கோவில் திருவிழாக்கள் போன்றவற்றில் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி எங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும். பல்வேறு துறைகளுக்கு நலவாரியம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசு மேடை மெல்லிசை கலைஞர்களுக்கு என்று ஒரு நல வாரியம் அமைக்க வேண்டும் என்றும், மாதம் 20 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

எங்களுடைய கோரிக்கையை அரசு ஏற்க மறுத்தால் நாங்கள் குடும்பத்தோடு எங்களுடைய ஆதார் அட்டை, ரேஷன் அட்டை தேர்தல் அடையாள அட்டை என அனைத்தையும் ஒப்படைத்து பட்டினிப்போராட்டம் நடத்த போவதாக இசைக்கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr