குடிநீர் தயாரிப்பாளர்கள் கட்டாயம் BIS மற்றும் Ground Water Clearance சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்

குடிநீர் தயாரிப்பாளர்கள் கட்டாயம் BIS மற்றும் Ground Water Clearance சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்

அடைக்கப்பட்ட குடிநீர் (Packaged Drinking Water) தயாரிப்பாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை சார்பாக விழிப்புணர்வு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் தலைமையேற்ற மாவட்ட நியமன அலுவலர், உணவு பாதுகாப்பு துறை அதிகாரி Dr.R.ரமேஷ்பாபு MBBS., கூறுகையில்... தயாரிப்பாளர்கள் கட்டாயம் BIS மற்றும் Ground Water Clearance சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

20 லிட்டர் கேன் மற்றும் அனைத்து குடிநீர் பாட்டில்களிலும், காலாவதி தேதி மற்றும் தயாரிப்பு தேதி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். பொதுமக்களும் குடிநீர் பாட்டில்களை உபயோகிக்கும் போது காலாவதி தேதி மற்றும் தயாரிப்பு தேதி பார்த்து பயன்படுத்தும் படி கூறினார்.

மேலும் இந்த கூட்டத்தில் அடைக்கபட்ட குடிநீர் சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81