வேங்கூர் மந்தை மாரியம்மன் கோவில் திருவிழா தீ மிதித்த பக்தர்கள்

வேங்கூர் மந்தை மாரியம்மன் கோவில் திருவிழா தீ மிதித்த பக்தர்கள்

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மந்தை முத்துமாரியம்மன் திருக்கோவில் 60வது ஆண்டு சித்திரை திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது.

முக்கிய நிகழ்வாக இன்று பக்தர்கள் காவிரி ஆற்றில் அம்மா மண்டபம் படித்துரையில் இருந்து பால்குடம், தீர்த்த குடம், அலகு காவடி எடுத்தும் , அக்னிசட்டி ஏந்தியும், குழந்தை வேண்டி நேர்த்தி கடன் செலுத்த கரும்பில் தொட்டில் கட்டி அதில் குழந்தை வைத்து திருவீதிவுலாக வந்தனர். மேலும் மந்தை மாரியம்மன் கோவிலுக்கு முன் பெரிய கட்டைகள் கொண்டு மூட்டப்பட்ட நெருப்பில் பத்தர்கள் இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

பின்னர் அவர்கள் கொண்டு வந்த பால், தீர்த்தத்தை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் தீப ஆராதனையும், சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். தீ மிதியில் போது ஏதும் அசாம்பாவிதம் நடக்காமல் இருக்க தீயணைப்பு துறையில் இருந்து 10 னக்கும் மேற்ப்பட்ட தீயணைப்பு வீரர்களும், பாதுகாப்பு பணியில் திருவெறும்பூர் காவல் துறையினரும் ஈடுபட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision