திருச்சியை மிரட்டும் மற்றொரு தின்னர் தொழிற்சாலை - அனுமதி இருக்கா?

திருச்சியை மிரட்டும் மற்றொரு தின்னர் தொழிற்சாலை - அனுமதி இருக்கா?

திருச்சி முதலியார் சத்திரம் ஆலம் தெருவில் உள்ள கமால் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் மூலம் தின்னர் தயாரித்து விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த (06.08.2024) அன்று இரவு தின்னர் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

பின்னர் இரண்டு தீயணைப்பு வாகனம் மற்றும் மாநகராட்சி தண்ணீர் வழங்கும் வாகனங்கள் மூலம் சம்பவ இடத்திற்கு விரைந்து தண்ணீர் மற்றும், ரசாயனத்தை கொண்டு போராடி தீயை அணைத்தனர். முதல் கட்ட விசாரணையில் தின்னர் தயாரிப்பதற்காக மூன்று பேரல்களில் வைக்கப்பட்டிருந்த ரசாயனம் தீ பற்றி வெடித்ததை அடுத்து தீ வேகமாக பரவியதாக கூறப்படுகிறது. இதனால் பகுதி முழுவதும் கரும் புகை மூட்டம் மற்றும் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல் போன்றவை ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் விஸ்வாநகர் அருகில் சிவம் போட்டோ ஸ்டியோ எதிரே இதே போன்று தின்னர் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை சுற்றிலும் குடியிருப்புகள், திருமண மண்டபம், வணிக வளாகங்கள் அதிக அளவில் உள்ளன. இந்த தொழிற்சாலையால் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு கண் எரிச்சல் போன்ற ஏற்படுவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தின்னர் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, தற்போது காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள இந்த தொழிற்சாலை அருகில் இருக்கக்கூடிய மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த தொழிற்சாலை முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா? பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision